முதல்வர் பாராட்டிய இணை ஆணையர் R.V.Ramya Bharati IPS (Joint Commissioner Of Police -North)

Police Magazine(TamilNews Group): சென்னை வடக்கு மண்ட இணை ஆணையர் ரம்யா பாரதி IPS அவர்கள் தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் சைக்கிளில் தனி ஆளாக இரவு ரோந்து பணி சென்று காவல்துறை அலுவல் செய்தது அனைவரும் பாராட்டும் வண்ணம் அமைந்து வருகிறது. அவ்வாறு சைக்கிளில் ரோந்து பணி சென்ற JCP அவர்கள் அலுவலில் இருந்த காவலர்களிடம் அங்குள்ள நிலைமையை கேட்டறிந்தார். விடியும் வரை விழித்திருந்து காவல் பணி செய்யவும் உத்தரவிட்டார். நாம்தான் மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு என்று ஒவ்வொரு காவலர்களிடம் அறிவுறுத்தினார். இவ்வாறு ரோந்து பணியில் ஈடுபட்டதை கண்டு அன்றிரவு பணி செய்த காவல்துறையினர் அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். இதை அறிந்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் JCP ரம்யா பாரதி குறித்து பாராட்டு தெரிவித்தார்.

1 / 1

1.