பெண் காவலரின் மதிக்கத்தக்க செயலை பாராட்டிய ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் IPS..

ஐதராபாத்தில் இருந்து ஒரு பெண் சென்னை தி .நகர் காவல் நிலையத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது 80வயது தாய் வசந்தா என்பவர் சென்னை தி்.நகர் நீலகண்ட மேத்தா தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வருவதாகவும் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக அவர்களை அழைத்து வர முடியாமல் போனது. ஆகவே எனது தாய்க்கு பாஸ் மற்றும் விமான டிக்கெட் எடுத்துள்ளதால் அவரை சென்னை விமான நிலையம் வரை அழைத்துச் செல்ல உதவி தேவை என்று கோரினார். உடனே காவல் நிலையத்தில் பணியில் இருந்த "முதல் நிலை பெண் காவலர் மகாலட்சுமி" மேற்படி நிலைய சரகத்திற்கு உட்பட்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று வயதான தாயிடம் நிலைமையை எடுத்துச் சொல்லி உடன் அழைத்து விமான நிலையம் வந்து போர்டிங் வரை வந்திருந்து பத்திரமாக அந்த 80வயது தாயை அனுப்பி வைத்தார். இந்த மதிக்கத்தக்க செயலை பாராட்டும் வண்ணம் சென்னை மாநகர காவல் ஆணையர் Shri.Mahesh Kumar Aggarwal IPS அவர்கள் பாராட்டி வெகுமதி அளித்தார்.

1 / 1

1.