சிறைவாசிகளால் தயாரிக்கப்படும் பலவிதமான பொருள்கள் மறுவாழ்வு நலன்கருதி ..

சிறைவாசிகளால் தயாரிக்கப்படும் பலவிதமான பொருள்கள் அவர்களின் மறுவாழ்வு நலன்கருதி பொதுமக்கள் வாங்கும் விதமாக அரசு சார்ந்த வளாகங்கள், காவல்துறையினர் வாங்கும் விதமாக காவல்துறை தலைமை அலுவலகங்கள் என்று சிறைவாசிகளின் நலனுக்காக சிறைத்துறையினர்களால் விற்பனை செய்யப்படுகிறது. விற்பனையின் போது சுதந்திர போராட்ட தியாகிகளின் ஆவணங்கள் சான்றுரைக்கும் காணமுடியாத அரிய பதிவுகள் நினைவு போற்றும் வகையில் வைக்கப்படுகிறது. சிறைத்துறை துணை தலைவர் ஆ.முருகேசன் M.A., M.L., M.B.A., (Deputy Inspector General) விற்பனை பற்றியும் ஆவணங்கள் அடங்கிய கண்காட்சி பற்றியும் விளக்கியுள்ளார். >சிறைவாசம் அனுபவித்த காலத்தில் மகாத்மா காந்தி எழுதிய பதிவுகளும், சுபாஷ் சந்திர போஸ் இருந்த மாதிரி சிறை அறையும், வ உ சிதம்பரம் பிள்ளை செக்கிழுத்த சாதனங்களும் முக்கிய ஆவணமாக வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.