Humanitarian Award for Inspector Rajeshwari

TamilNews - Police Magazine: மனிதநேயத்தை அடையாளமாகக் கொண்ட ஆய்வாளர் திருமதி ராஜேஸ்வரி அவர்களின் சமீபத்திய மனிதநேய செயலை பாராட்டி தமிழக முதல்வர், நீதியரசர், காவல்துறை தலைமை இயக்குனர், திரையுலகம், தொண்டு நிறுவன அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகை ஊடகங்கள், சமூக வலைதளம் என்று தமிழகம் மட்டுமல்லாது மற்ற மாநிலங்கள் ஏன் உலகமே உற்று நோக்கும் அளவுக்கு இவருடைய மனிதாபிமான செயல் பாராட்டப்பட்டு வருகிறது. கத்தி காயத்துடன் குற்றவாளியை பிடித்து கூண்டில் நிறுத்தி வீரதீர செயலுக்கான பதக்கம் பெற்றவர். ஏழை எளிய பெண்ணின் திருமணத்திற்கு தனது சொந்த செலவில் 1லட்சம் ரூபாய்க்கு சீர்வரிசை கொடுத்த சீர்மிகு ஆய்வாளர் இவர். எளியவர்களின் கல்விக்காக இன்றுவரை உரிய உதவிகளை செய்து வருபவர். பல எண்ணற்ற சமூக அக்கறை கொண்ட நிகழ்வுகளை நிகழ்த்தி நூற்றுக்கணக்கான பத்திரிகை ஊடகங்களில் காட்சி அளித்தவர். எண்ணிலடங்கா சமூக பொறுப்புக்கு மேன்மை பொருந்திய K6 TP சத்திரம் காவல் நிலைய ஆய்வாளரான இவருக்கு தமிழ் நியூஸ் - போலீஸ் மேகஸின் சார்பாக மனிதநேய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

2 / 2

2.

Previous