C4, W10, W11 பொறுப்பு ஆய்வாளர் ஜெயலக்ஷ்மியின் மனித நேய செயல்

Police Magazine(TamilNews Group): ஆய்வாளர் ஜெயலக்ஷ்மி, C4 காவல் நிலைய சரகத்தில் உள்ள அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனை வளாகத்தில் சுற்றிதிரிந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மனநிலை பாதித்த பெண்மணி ஒருவரை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு, மாதவரம் காப்பகத்தில் சேர்த்தார். அதேபோல் W10 காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஆதரவற்ற நிலையில் இருந்த பெண்மணி ஒருவரை காக்கும் கரங்கள் காப்பகத்தில் சேர்த்தார். அதைத் தொடர்ந்து பிராட்வே பேருந்து நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் இருந்த ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவரை காக்கும் கரங்கள் காப்பகத்தில் சேர்த்து, மேலும் அவர்களுக்கு உரிய உணவு உடை வசதிகளையும் செய்து கொடுத்தார். இதன்மூலம் காப்பகத்தில் உள்ள அனைவருக்கும் உதவிக்கரம் நீட்டி உணவு உடை என வழங்கி ஆதரவற்றோர்களுக்கு ஆதரவு தரும் வகையில் கனிவான அறிவுரைகளையும், உடன் பெண் காவலர்களின் உறுதுணையோடு ஆய்வாளர் ஜெயலக்ஷ்மி காவல் துறைக்கு பெருமை சேர்க்கும் விதமாக செயல்பட்டு வருகிறார்.

1 / 1

1.