பெண் தலைமை காவலருக்கு முதல்வர் அஞ்சலி

Police Magazine(TamilNews Group): தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவு கட்டிடத்தின் அருகே உள்ள பழமையான மரம் ஒன்று பலத்த மழையின் காரணமாக வேரோடு சாய்ந்தது. அப்போது காவல் பணியில் இருந்த தலைமை காவலர் திருமதி கவிதா அவர்கள் மரம் சாய்ந்ததில் சிக்கி உயிரிழந்தார். இவர் முத்தியால்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். உயிரிழந்த பெண் காவலர் கவிதாவிற்கு தமிழக முதல்வர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி, அவருக்கான உரிய நிவாரணத் தொகையும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

1 / 1

1.