தேனீர் கடைக்காரர் மகள் DSP- யாக பொறுப்பு

Police Magazine(TamilNews Group): புதுக்கோட்டை மாவட்டம் வேப்பங்குடி ஊராட்சி, செட்டியாப்பட்டி கிராமத்தில் தேனீர் கடை நடத்திவரும் வீரமுத்து - வீரம்மாள் தம்பதியினரின் 3 வது மகள் ஏழை மாணவி "பவானியா" விவசாய கூலி வேலைக்கு சென்றுகொண்டே தனது படிப்பை தொடர்ந்து, குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று 23வயதில் DSP- யாக பொறுப்பேற்க உள்ளார். இதோடு தனது இலக்கை நிறுத்தாமல் IAS அதிகாரியாக வேண்டும் என்பதே தனது இலட்சியம் என்றும், அதற்காக மேலும் படிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். DSP- யாக தேர்வாகிய நான் பொதுமக்களுக்கான பொறுப்பை நிச்சயம் ஆற்றுவேன் என்று உறுதி அளித்துள்ளார். காவல் துறைக்கு சிறப்பு சேர்க்க இருக்கும் இந்தப் பெண்மணியை பாராட்டுவதில் "போலீஸ் மேகஸின்" பெருமை கொள்கிறது.

1 / 1

1.