காய்கறி வியாபாரியை மதித்த திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி அரவிந்தன் IPS

திருவள்ளூர் மாவட்ட தாமரை பக்கத்தில் 144தடையின் வாகன சோதனையில் அந்த வழியாக காய்கறி ஏற்றி வந்த வண்டியை மடக்கிய போது அதை எடுத்துச் செல்வதற்கு முறையான ஆவணம் இல்லாததால் அந்த வண்டியை நிறுத்தி வைத்தனர் காவலர்கள். வெகுநேரம் ஆகிய காரணத்தினால் காய்கறியை கொண்டு சென்று விற்க முடியாது என்ற சூழ்நிலையில் கோபம் கொண்ட காய்கறி வியாபாரி கார்த்தி காவல்துறை வண்டியின் முன்பு காய்கறிகளைக் கொட்டி புலம்பினார். இந்த சம்பவத்தை அறிந்த அம்மாவட்ட "காவல் கண்காணிப்பாளர்(superintendent of police) திரு.அரவிந்தன் IPS" அவர்கள் பாதிக்கப்பட்ட வியாபாரி கார்த்தி வீட்டிற்கு சென்று காவல் துறை சார்பாக மன்னிப்பு கேட்டு, காய்கறிகளையும் உடன் இழப்பீட்டுத் தொகையும் அளித்தார். காவல்துறையின் கண்ணியத்தை உணர்த்திய இந்த செயல் அனைவராலும் பாராட்டப் பெற்றது.

1 / 1

1.