தீயணைப்பு வீரர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார் டிஜிபி திரு.சைலேந்திரபாபு..

கொரோனா நோய்த் தொற்றை தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை இயக்குநர் உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதும் தீயணைப்பு மீட்பு படையினரால் கிருமிநாசினி தெளிக்கும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. பணியிலிருக்கும் தீயணைப்புத் துறையினரை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் கவச உடை Personal Protective Equipment (PPE suit), முக கவசம், கையுறை, ரப்பர் காலணி போன்ற பாதுகாப்பு உபகரணங்களை RAILWAYS - FIRE AND RESCUE SERVICES DGP(Director General of Police) Dr.C.Sylendra Babu IPS அவர்கள் தீயணைப்பு வீரர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்வில் மத்திய மண்டல துணை இயக்குநர் திருமதி.மீனாட்சி விஜயகுமார் உடன் இருந்தார்.

1 / 1

1.